
அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி
முக்கியமாக இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பயிற்சி பட்டறை மூலம் அல்லு அர்ஜுனுக்கு புதுமையான நடிப்பு பயிற்சி கொடுப்பதோடு, அவரது கெட்டப்பையும் மாற்றுகின்றனர். அதனால் அடுத்த மாதத்தில் இருந்து பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் அல்லு அர்ஜுன், படப்பிடிப்புக்காக முழுமையாக தன்னை தயார் படுத்தி கொள்ளப் போகிறார்.
இந்த படத்தில் வில்லன்களுடன் அல்லு அர்ஜுன் மோதும் ஒரு சண்டை காட்சி தண்ணீருக்கடியில் படமாக்கப்பட உள்ளதாம். இந்த காட்சிக்காக தண்ணீருக்கடியில் 20க்கும் மேற்பட்ட சிறிய ரக கோப்ரா கேமராக்களை பொருத்தி படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த கதைக்களத்துக்காக அல்லு அர்ஜுனின் ஹேர் ஸ்டைல் மட்டுமின்றி அவரது பாடி லாங்குவேஜ் பெரிய அளவில் மாற்றி இதுவரை இல்லாத அளவுக்கு அவரை புதுமையான கெட்டப்பில் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அட்லி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!