
பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த டூரிஸ்ட் பேமிலி
படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலம் மட்டுமே பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் தயாரிப்பாளர் வருவாய் பார்த்திருப்பார். படத்தைத் தியேட்டர்களில் திரையிட்ட அனைவருக்குமே லாபம் கிடைத்துள்ளது. இந்த 2025ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் "மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன்" ஆகிய படங்கள் எதிர்பார்க்காத வரவேற்பையும் வசூலையும் பெற்றன. அந்த வரிசையில் தற்போது "டூரிஸ்ட் பேமிலி"யும் சேர்ந்துள்ளது.
படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்க இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது வசூல் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட வாய்ப்புள்ளது. இப்படத்தின் வியாபார வெற்றி யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, சசிகுமாருக்கு நன்றாக உதவுகிறது. அவர் நடித்து தேங்கிக் கிடந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!