
ரஜினி பெயரும் தேவா, தனுஷ் பெயரும் தேவா !!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள "கூலி" படத்தில் அவருடைய கதாபாத்திரப் பெயர் தேவா. "தளபதி" படத்தில் பிரபலமான ஒரு பெயர் "தேவா" என்பதால் அந்தப் பெயரையே "கூலி" படத்தில் ரஜினிக்காக வைத்திருக்கலாம் லோகேஷ். ரஜினியின் பெயரை சூர்யா என இப்போது வைத்தால் அரசியல் என சொல்லவும் வாய்ப்புண்டு.
இதனிடையே, ரஜினியின் முன்னாள் மருமகனும் நடிகருமான தனுஷ் நடித்து ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ள "குபேரா" படத்தில் தனுஷின் கதாபாத்திரப் பெயரும் தேவா என்பது நேற்று வெளியிட்ட போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.
இது யதேச்சையாக நடந்திருக்கவே வாய்ப்புள்ளது. "குபேரா" படத்தின் படப்பிடிப்பை "கூலி" படத்திற்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் அடுத்தடுத்து வெளியாக உள்ள இருவரது கதாபாத்திரப் பெயர்களும் ஒன்றாக இருப்பது ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு வர வாய்ப்புள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!