
சம்பள விவகாரம் தீர்ந்ததால் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா?
இந்த புதிய பபடத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளார். அவர் படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாக செய்திகள் வெளியாகின. அவ்வளவு சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பு நிறுவனம் யோசித்தாகச் சொன்னார்கள். இருந்தாலும் படத்தில் நயன்தாரா நடிப்பதை இயக்குனரும், சிரஞ்சீவியும் விரும்பியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோடிகளைக் குறைத்துக் கொள்ள நயன்தாரா சம்மதம் சொல்லிவிட்டாராம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அனில் ரவிப்புடி கடைசியாக இயக்கி பொங்கலுக்கு வெளிவந்த "சங்கராந்திகி வஸ்துனம்" படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. "சைரா " படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்த நயன்தாரா அடுத்து வந்த "காட்பாதர்" படத்தில் தங்கையாக நடித்தார். இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!