
ருக்குவாக ரசிகர்களை கவர்ந்த பூஜா ஹெக்டே
இந்த படத்தில் பூஜா ஹெக்டே பக்கத்து வீட்டு பெண் போன்று நடித்து ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் ருக்கு கதாபாத்திரம் அதிகம் பேசுவதில்லை, ஆனால் அவரது மவுனங்கள் மூலம் முழு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். காதல், வலி, நம்பிக்கை போன்றவற்றை அவரது கண்களால் வெளிப்படுத்தினார்.
பூஜாவின் இந்த கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் தனித்துவமான வகையில் இருந்தது. தற்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பூஜா ஹெக்டே கதாபாத்திர காட்சிகள் மற்றும் கனிமா பாடல் நடனம் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இவரது அடுத்த படங்களான ஜனநாயகன், காஞ்சனா 4 போன்ற படங்களையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!