
பிளாஷ்பேக்: தேவமனோகரி... பாட்டு ஹிட்டு, படம் அவுட்டு
சபாபதி, ஸ்ரீவள்ளி, அறிவாளி, மனம் ஒரு குரங்கு உட்பட சில படங்களை இயக்கிய ஏடி.கிருஷ்ணசாமி இயக்கியிருந்தார். ஹொன்னப்ப பாகவதர், பானுமதி, பி.எஸ்.சரோஜா, எம்.ஆர்.சுவாமிநாதன், காளி என்.ரத்னம், ஆர்.பத்மா, ஜி.எம்.பஷீர், வி.கே.கார்த்திக்கியேன் உட்பட பலர் நடித்த படம். 1949ம் ஆண்டு வெளியானது.
தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட இளவரசி மனதை வெல்ல பல இளவரசர்கள் போட்டியிடுகின்றனர். தான் இளவரசன் எனத் தெரியாமல் இருக்கும் ஹொன்னப்ப பாகவதர் மீது தேவமனோகரிக்கு காதல் வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது படம். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் .
இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாபநாசம் சிவன், அவர் சகோதரர் ராஜகோபாலய்யர், தஞ்சை ராமையா தாஸ் பாடல்கள் எழுதியிருந்தனர். பானுமதியின் குரலில் "இந்திரனோ இவர் சந்திரனோ", "சேலைகட்டிய மாதரை நம்பி காலத்தை கழிக்காதே..", "மதனா நீ வா", ஹொன்னப்ப பாகதவரின் குரலில் "தாயே பராசக்தியே" உட்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.
திருவிதாங்கூர் சகோதரிகளின் (பத்மினி, ராகினி) நடனமும், பாடல்களும் பேசப்பட்டாலும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!