
தளபதி லுக்கில் ரஜினிகாந்த் : ரசிகர்களுக்கு கூலி தந்த குஷி
அதில் சவுபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோரது பின் தலைப் பகுதியை மட்டும் காட்டி, கடைசியில் ரஜினியின் முகத்தை மட்டும் சைட் ஆங்கிளில் காட்டினார்கள். அந்த குறிப்பிட்ட "ஷாட்"ல் உள்ள ரஜினியின் லுக்கை மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த "தளபதி" பட ரஜினி லுக்குடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ரஜினி - லோகேஷ் கூட்டணியின் முதல் படம் என்பதாலும், ஒவ்வொரு தென்னிந்திய மொழியிலிருந்தும் முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் இடம் பெறுவதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதை இன்னும் அதிகமாக்கும் விதத்தில் "இன்னும் 100 நாளில் கூலி" வீடியோ உள்ளதாக திரையுலகத்திலும் பேச்சு எழுந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!