
அப்பா நண்பர்கள் உதவவில்லை : மயில்சாமி மகன் அன்பு ஆதங்கம்
இந்த பட நிகழ்ச்சியில் பேசிய அன்பு "என் அப்பா பலருக்கு உதவி செய்து இருக்கிறார். தன்னிடம் வசதி, பணம் இல்லாவிட்டால் கூட கடன் வாங்கி மற்றவர்களுக்கு உதவுவார். அவர் மறைந்தபின் நான் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடியபோது, யாரும் உதவவில்லை. பல சினிமா இயக்குனர், நடிகர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்பவாது அவர்களே நேரில் சந்தித்தால் அப்படியா என்னை பார்க்க முயற்சி செய்தீர்களா. எனக்கு தெரியாதே என்றார்கள். அப்பாவின் நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சினிமாக்காரர்கள் சினிமாவில் இருப்பவர்கள், இருந்தவர்கள் வாரிசுகளுக்கு உதவ வேண்டும். நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறேன். இந்த படத்தில் அப்பா நடிக்கவில்லை. அவர் என்னுடன் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார். எமன் கட்டளை படத்தில் நெல்லை சிவா எமனாக நடித்துள்ளார். அவர் சின்ன டயலாக் பேசி, தன் ஸ்டைலில் சிரித்தாலே போதும், செட்டே அதிரும். அவரும் காலமாகிவிட்டது வருத்தமான விஷயம்" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!