
ஜனநாயகன் படத்தில் குத்தாட்டம் போடுவது யார்?
மே 05, 2025
Advertisement
முன்னனி ஹீரோக்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு முன்னணி ஹீரோயின் குத்தாட்டம் போடுவது என்பது டிரென்ட் ஆகிவிட்டது. ஒருவகையில் படத்தின் பிஸினஸ், வெற்றி, விளம்பரங்களுக்கு அந்த பாடல் உதவுகிறது. ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடினார். கோட் படத்தில் திரிஷா ஆடினார். ரெட்ரோ படத்தில் ஸ்ரேயா ஆடினார். அந்தவகையில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் ஒரு பாடலுக்கு யார் ஆடப்போகிறார்கள் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. ஏற்கனவே ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, ஸ்ருதிஹாசன் என 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். 5வது ஆக டான்ஸ் ஆட உள்ள பிரபல நடிகை யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால், அவருடன் இதற்குமுன்பு ஹீரோயினாக நடித்த சமந்தா, திரிஷா, தமன்னா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலரும், பல பாலிவுட் நடிகைகளும் அந்த பாடலுக்கு ஆட தயாராக இருக்கிறார்களாம். ஆனால், கதையை குத்தாட்ட பாடல் கெடுத்துவிடும் என்று இயக்குனர் எச்.வினோத் நினைத்தால், அப்படியொரு பாடல் காட்சி எடுக்கப்படதாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!