
பிளாஷ்பேக்: கடைசி வரை கவர்ச்சியாக நடிக்காத சுஜாதா
சுஜாதாவின் அண்ணன் கோபிநாத் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்தார். அப்போது அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் நடிக்கவில்லை. அதனால் தனது தங்கை சுஜாதாவை சினிமாவில் நடிக்க வைத்து பெரிய நடிகையாக்க விரும்பினார். அவரது முயற்சியால் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
முதல் படம் "தபஸ்வினி". இதில் விதவையாக சோகமான கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததாலோ என்னவோ அவர் நடித்த 40 மலையாள படங்களிலும் சோகமான கேரக்டர்களிலேயே நடித்தார். 1974ல் "அவள் ஒரு தொடர்கதை" மூலம் தமிழுக்கு வந்தார். அதிலும் சோகமான கேரக்டர்தான்.
"அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, சந்திப்பு, தீர்ப்பு, திருப்பம், நூல்வேலி, பூந்தளிர், மயங்குகிறாள் ஒரு மாது, விதி" என விதவிதமான கேரக்டர்களில் நடித்தார். முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகுமார், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். ஒரு கட்டத்தில் யார்யாருக்கெல்லாம், ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்தார். சுஜாதா நடித்த கடைசி படம் "வரலாறு". இதில் அஜித்தின் அம்மாவாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்த சுஜாதா, எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. பெரும்பாலும் சோக கேரக்டர்களிலேயே நடித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!