
அட்லி படத்திற்கு அல்லு அர்ஜுனின் புதிய கோச் இவர்தான்
இவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றாலும் இவர் இந்திய சினிமாவிற்கு ஒன்றும் புதியவரல்ல. ஏற்கனவே ரன்வீர் சிங், மகேஷ்பாபு போன்றவர்களுக்கு கோச் ஆக பணியாற்றியவர் தான். ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர்-க்கும் இவர்தான் கோச்சாக பணியாற்றினார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு கோச் ஆக மாறியுள்ளார். இவரைப் பொறுத்தவரை ரக்பி மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் தீவிர பயிற்சி பெற்றவர். அதுமட்டுமல்ல நீச்சல் மற்றும் கடல் தொழில்நுட்பத்திலும் கைதேர்ந்தவர். இவர்தான் அட்லி படம் முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு கோச்சாக பணியாற்ற இருக்கிறார். அல்லு அர்ஜுனுடன் தான் எடுத்த புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்டீவன் லாய்டு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!