
இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம்
சிரஞ்சீவி சார்ஜா இறந்த ஓராண்டிலேயே மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வெளியானது. அப்போது அவர், நான் எப்போதுமே எனது மகனின் எதிர்காலம் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் எனது வாழ்க்கையில் இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனபோதும் தற்போது அவரது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மேகனா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் மேக்னாராஜ். அதில், தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீ மட்டுமே கணவர் என்று பதிவிட்டுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது மேக்னா ராஜ் மறுமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!