
இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா
அப்படியான படங்கள் பற்றி வேவ்ஸ் 2025 மாநாட்டில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. “"புஷ்பா 2" போன்ற படங்கள் தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே அதிக வசூலைக் குவித்தது. பெரிய திரையில் வெளிப்படும் மாயாஜாலத்தை அனுபவிப்பதற்காக "புஷ்பா, கேஜிஎப், பாகுபலி" போன்ற படங்களை 100ல் 90 பேர் பார்க்கிறார்கள். புஷ்பா ராஜ், ராக்கி பாய், பாகுபலி போன்ற இயல்புக்கு மீறிய ஹீரோக்களைப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். தனிப்பட்ட விதத்தில் நானும் அத்தகைய படங்களையும் ஹீரோக்களையும் பார்க்க விரும்புகிறேன்.
அனைத்து படங்களும் ஹீரோ கதாபாத்திரங்களால் மட்டுமல்லாது வலுவான உள்ளடக்கத்தாலும் வெற்றி பெற்றுள்ளன. ராஜமவுலி கூட "பாகுபலி" படத்தைத் தெலுங்கில்தான் உருவாக்கினார். ஆனால், அவை சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றார்,” என்று குறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!