
நடிகர் சங்கத்தில்தான் திருமணம் செய்வேன் : விஷால் மீண்டும் உறுதி
சொன்னபடி இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் இடையில் ஐதரபாத்தை சேர்ந்த ஒரு கோடீஸ்வர பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்த திருமணம் நின்று போனது. உங்கள் சவால் எங்கே போனது என்று அப்போது விஷாலை ட்ரோல் செய்தார்கள்.
இப்போது மீண்டும் பழைய பல்லவியை பாடத் தொடங்கி உள்ளார். நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும். கட்டிடப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் ஏற்கனவே கூறியது போல நடிகர் சங்கம் கட்டப்பட்டதற்கு பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். அதில் உறுதியாக இருக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக கட்டப்பட்ட கட்டிடம். எனவே அனைவரும் திறப்பு விழாவுக்கு வருகை தரவேண்டும் வாசலில் இருந்து வரவேற்கும் முதல் ஆளாக நான் காத்திருப்பேன்" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!