
பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம்
ஏவிஎம் சரவணன், கார்த்திக்கை சந்தித்து பேசினார். "ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஆனால் நான் வில்லனாக நடித்தால் எனது இமேஜ் போய்விடும், அதன்பிறகு வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுவார்கள்" என்று கூறி நடிக்க மறுத்தார்.
இதற்கு பதில் அளித்த சரவணன் "அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த படத்தில் வில்லனாக நடியுங்கள், அடுத்து உங்களை ஹீரோவாக போட்டு ஒரு படம் எடுப்போம், அதை எஸ்.பி.முத்துராமனே இயக்குவார். அந்த படத்தின் கதை உங்கள் வில்லன் இமேஜை உடைப்பதாக இருக்கும்" என்றார். அதன்பிறகு கார்த்திக் நடிக்க சம்மதித்தார்.
கார்த்திக்கு கொடுத்த வாக்குறுதிக்காக கார்த்திக் நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான படம் "நல்லதம்பி". இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கார்த்திக் ஹீரோவாக நடித்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!