
ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி
மேற்கண்ட படங்களில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளிவந்துள்ள "ஹிட் 3" படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் உலக அளவில் 43 கோடி வசூலித்துள்ளது. நேற்றைய வெளியீடுகளில் இந்தப் படத்தின் வசூல்தான் இந்தியப் படங்களில் மிக அதிகம் என்றும் "பெருமை"பட்டுக் கொண்டுள்ளார்கள். அதனால், "ரெட்ரோ, ரெய்டு 2" படங்களின் வசூல் அதைவிடக் குறைவானதே என்பதுதான் அதன் அர்த்தம்.
நானி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "தசரா" படம் முதல் நாளில் 38 கோடி வசூலித்தது அவரது படங்களின் சாதனையாக இருந்தது. அதை "ஹிட் 3" படம் முறியடித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!