
மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள்
நாளை "ரெட்ரோ" என்ற பெரிய படம் வந்தாலும், கூடவே "டூரிஸ்ட் பேமிலி" என்ற சிறிய படத்தையும் தைரியமாக வெளியிடுகிறார்கள். "ரெட்ரோ" படத்திற்குப் போக மீதி கிடைத்த தியேட்டர்களில்தான் "டூரிஸ்ட் பேமிலி" வெளியாகிறது.
அடுத்த வாரம் மே 9ம் தேதிக்கும் சில பல படங்களை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அவை சிறிய படங்களாகத்தான் இருக்கப் போகிறது. அதற்கடுத்து மே 16ம் தேதி சந்தானம் நடித்துள்ள "டிடி நெக்ஸ்ட் லெவல்" படமும், சூரி நடித்துள்ள "மாமன்" படமும், நவீன் சந்திரா நடித்துள்ள "லெவன்" படமும் வெளியாக உள்ளன.
அதற்கடுத்த வாரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள "ஏஸ்" படமும், சண்முகப்பாண்டியன் நடித்துள்ள "படை தலைவன்" படமும் வெளியாக உள்ளது. கவுதமன் நடித்துள்ள "படையாண்ட மாவீரா" படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதென தற்போது அறிவித்துள்ளார்கள்.
மே மாதம் நாளை ஆரம்பிக்க உள்ள நிலையில் கோடை விடுமுறைக் காலம் என்பதால் படத்தை வெளியிட பலரும் தயாராகி வருகிறார்கள். அதனால், மே ரிலீஸ் பட்டியலில் புதிது புதிதாக படங்கள் சேர்ந்து வருகின்றன.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!