
நிறைவுக்கு வரும் குட் பேட் அக்லி ஓட்டம்
மே 1ம் தேதி "ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி" உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் "குட் பேட் அக்லி" படத்தை பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்குகிறார்கள். இருந்தாலும் கடந்த 20 நாட்களாக இந்தப் படம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே ஓடி வசூலித்துள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பாக இந்தப் படம் உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் எந்த வசூல் அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் 240 கோடி வரை வசூல் வந்திருக்கலாம் என்று தகவல். அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிகமாக வசூலித்த படமாக இந்தப் படம் அமைந்தது.
இருந்தாலும் இன்னும் 500 கோடி வசூல் என்ற அளவில் அஜித் போகாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு வருத்தமாகவே உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!