
70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ்
இன்றைய கதாநாயகியரில் எந்த ஆடை அணிந்தாலும் அதில் தனி அழகுடன் ஜொலிப்பவர் பூஜா ஹெக்டே. மாடர்ன் உடையானாலும், புடவை ஆனாலும் அவரது வசீகரமே தனி.
70 வருட காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து போட்டோ ஷுட் எடுத்து அவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். “70 வருட பழமையான ஒரு அழகிய புடவை. எனது அழகான காஞ்சிபுரம் பாட்டியின் புடவை, என்னை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. முதல் மழைக்குப் பிறகு ஈரமான மங்களூருவின் சேற்று வாசம், திருமணத்திற்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் மல்லிகையின் புதிய வாசனை… ஓ… எளிமையான விஷயங்களில் எத்தனை அழகு,” என அந்த 70 வருட புடவை அணிந்த அனுபவத்தை அற்புதமாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த அழகுடன் அவருடைய வெட்கமும் ஒரு "ரெட்ரோ" அழகுதான்...


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!