
மண்டாடி யார்? : இயக்குனர் விளக்கம்
கதா நாயகியாக "சாட்டை" மஹிமா நம்பியார் சிறிய இடைவெளிக்கு பிறகு நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், ரவீந்திரா விஜய், சாச்சனா நமிதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கூறியதாவது: காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் "மண்டாடி" என்று அழைக்கின்றனர்.
மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.
காமெடியனில் இருந்து கதை நாயகனாக மாறிக்கொண்டிருக்கும் சூரிக்காகவே எழுதப்பட்ட கதை. மண்டாடி கதாபாத்திரமும் அவரை மனதில் வைத்தே எழுதப்பட்டது. இந்த படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும்.
மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!