
இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர்
சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் இறந்து விட்டதாக ஒரு பொய் செய்தி பரவி அதை அவர் மறுத்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல அவர் இறந்து விட்டதாக ஒரு பொய் தகவலை சோசியல் மீடியாவில் சில விஷமிகள் பரப்பி உள்ளனர்.
தற்போது காஷ்மீர் பகுதியில் தனது மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் வேணுகோபால். இவரது இறப்பு குறித்த இந்த பொய் செய்தியை அவரது நண்பர்கள் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே வருடத்தில் இரண்டு முறை இறப்பு தேடி வந்து விட்டதால் எனது எதிர்காலம் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை என்று ஊருக்கு வந்ததும் ஒரு பிரஸ்மீட் வைத்து சொல்லி விடவா ?” என்று விரத்தியுடன் கேட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!