
சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா
கடந்த வாரம் அஜித் நடித்து வெளிவந்த "குட் பேட் அக்லி" படம் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் பற்றி இரு வேறு மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும் படம் தரும் வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் கோடை விடுமுறையில் வரும் படங்கள் எப்படியாவது வசூலை அள்ளித் தரும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
இந்த சம்மரில் மேலும் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் திரையுலக வட்டாரங்களில் ஆர்வத்துடன் உள்ளார்கள். ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள "தக் லைப்" படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியாகிவிட்டது. அடுத்து இசை வெளியீடு, டீசர், டிரைலர் என வர உள்ளது.
மே 1ம் தேதி வெளியாக உள்ள "ரெட்ரோ" படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. நேற்று மாலை சென்னையில் அப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ள சுந்தர் சி, வடிவேலு கூட்டணியின் "கேங்கர்ஸ்" டிரைலர் வெளியீடு இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
அடுத்து மே மாதம் வெளியாக உள்ள மற்ற சில படங்களின் அப்டேட்டுகளும் அடுத்த வாரம் வரை வெளியாக இருக்கின்ற து. இதனால், தமிழ் சினிமா இந்த சம்மரில் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். வரும் முக்கிய படங்களும், நல்ல படங்களும் ஓடி வசூலைக் கொடுத்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!