
திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன தக் லைப்
சென்னையில் நேற்று இப்படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அது முடிந்த பின்பு, யு டியுபில் வெளியிடுவதற்காக கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் ஆகியோர் பங்கேற்ற ஒரு பேட்டியை படக்குழுவினர் எடுத்துள்ளார்கள்.
ஒவ்வொருவரிடம் "தக் லைப்" ஆக, "வைப்" ஆக மட்டுமே அதில் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாம். ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி விரைவில் யு டியூபில் வெளியாக உள்ளது.
அப்போது த்ரிஷாவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்டதற்கு, “எனக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லை. அது நடந்தாலும் ஓகே தான், நடக்காமல் போனாலும் ஓகே தான்" என பதிலளித்துள்ளார்.
41 வயதான த்ரிஷா, 42 வயதான சிலம்பரன் தமிழ் சினிமாவில் இன்னும் "பேச்சுலர்" ஆகவே இருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு திருமண நிச்சயம் ஒன்று நடைபெற்றது. ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. சில முன்னணி நடிகைகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டவர் சிம்பு.
நேற்று இவர்கள் பேசிய அந்த வீடியோ யு டியுபில் வெளிவந்தால் இன்னும் பல "தக் லைப்" பதில்கள் பற்றி தெரிய வரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!