
முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ்
"வழக்கு எண் 18/9" படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீ, அதன்பின் மிஷ்கின் இயக்கிய "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்", மற்றும் "சோன்பப்டி, வில் அம்பு" ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2023ல் வெளிவந்த "இறுகப்பற்று" படத்திலும் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார்.
சமீபத்தில் உடல் இளைத்து, நீளமான தலைமுடி வைத்து ஆளே அடையாளம் தெரியாதபடி சில புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி அளித்தார் ஸ்ரீ. அவரது இந்த நிலைக்கு என்ன காரணம் என பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தனது முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஸ்ரீ எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருக்கிறது என்று தகவல்கள் வந்தன. அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர வைத்திருக்கிறார் லோகேஷ் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஸ்ரீ குடும்பத்தினர் சார்பில் அவரே பத்திரிகைச் செய்தியையும் பகிர்ந்துள்ளார் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!