
குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது
திரையரங்கில் வசூலை குவித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்பதே பலரின் பார்வையாக இருக்கிறது. அந்த வகையில் நாம் விசாரித்த தகவலின்படி குட் பேட் அக்லி திரைப்படம் மே 09 அல்லது 10 அன்று வெளியாகுமென்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 90 கோடிக்கு உரிமையை பெற்றுள்ளது. திரையரங்கில் எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ அதேபோல் ஓடிடி தளத்திலும் மாபெரும் வெற்றி பெரும் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!