
நம்பிக்கை உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி
சிங்கப்பூரில் படித்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் காயமடைந்து குணமடைந்து வருகிறார். அதற்காக திருப்பதி சென்று முடி காணிக்கை, அன்னதானம் செய்த அன்னா, நம்பிக்கை உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்ட பின்பு பெருமாளை தரிசனம் செய்துள்ளார்.
அவர் அப்படி செய்ததற்கு பக்தர்கள் பாராட்டி வருகிறார்கள். இதற்கு முன்பு ஆந்திர மாநில முதல்வராக இருந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி சென்ற போதெல்லாம் அவர் பெருமாளை தரிசனம் செய்ததில்லை. நம்பிக்கை உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு செல்வதைத் தவிர்க்கவே அவர் அப்படி செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான பக்தர்கள் ஜெகன்மோகன் ரெட்டியையும், அன்னாவையும் ஒப்பிட்டு, அன்னாவைப் பாராட்டி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!