
அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்
2026 தீபாவளிக்கு அந்தப் படம் வெளிவரும் வகையில் உருவாக உள்ளதாம். அடுத்த சில மாதங்களுக்கு அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வதில் பிஸியாக இருப்பதால் வருடக் கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக வாய்ப்புள்ளது. படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை விரைவில் சொல்கிறேன் என ஆதிக்கிடம் அவர் சொன்னதாகத் தகவல்.
"குட் பேட் அக்லி" படத்தின் முடிவில் அஜித்தை தான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை "மேக்கிங் வீடியோ" மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆதிக். அதில் அஜித்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார், அவரது கைகளைத் தொட்டு முத்தமிடுகிறார். இப்படியெல்லாம் செய்தால் அடுத்த வாய்ப்பு என்ன அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வழங்கலாமே.
சரண், "சிறுத்தை" சிவா, எச்.வினோத் ஆகிய இயக்குனர்கள் போல அடுத்த சில படங்களுக்கு அஜித்துடன் ஆதிக் பயணித்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!