
பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம்
அந்த கதையை இளையராஜாவிடம் கொடுத்து அதற்கு பாடல்கள் தருமாறு கேட்டார் தயாரிப்பாளர் கலைமணி. ஆனால் இளையராஜா அப்போது ரொம்பவே பிசியாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடலை கொடுக்க முடியவில்லை. ஒரு நாள் கலைமணியை அழைத்த இளையராஜா, "நான் சில தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த சில பாடல்களை அவர்கள் தங்கள் படத்தில் பயன்படுத்தவில்லை. அதை நீங்கள் கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
இதை தொடர்ந்து நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் இருந்த பயன்படுத்தப்படாத 7 பாடல்களின் உரிமங்களை வாங்கி, அதை மணிவண்ணனிடம் கொடுத்து இந்த பாடல்களுக்கு ஏற்ப ஒரு கதை எழுதுங்கள் என்றார். அப்படி எழுதப்பட்ட கதைதான் "இங்கேயும் ஒரு கங்கை".
இந்த படத்தில் முரளி, கன்னட நடிகை தாரா, சந்திரசேகர், ஜனகராஜ், வினு சக்ரவர்த்தி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சோலை புஷ்பங்களே சோகம் சொல்லுங்களேன், ஒரு வில்ல வளைச்சு, ஆனந்த நெஞ்சம், சந்தன கிளியே, ஆட்டம்தான், தெற்கு தெரு மச்சானே என அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படம் சுமாரன வரவேற்பை பெற்றது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!