
உறுதியானது லியோ - குட் பேட் அக்லி ஒற்றுமை
“தங்களது குடும்பத்திற்காக முந்தைய தங்களது "டான்" வாழ்க்கையைத் தியாகம் செய்து வாழ முடிவு செய்கின்றார் நாயகன். ஆனால், பழைய பகை அவர்களை மீண்டும் துரத்த, தியாகம் செய்த "டான்" வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்து தங்களைது குடும்பத்தைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை”.
மேலே குறிப்பிட்ட நாயகன் பெயரைச் சொல்லாத கதைச் சுருக்கத்தை "லியோ" படத்திற்கும், "குட் பேட் அக்லி" படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம்.
இரண்டு படங்களிலுமே நாயகியாக நடித்திருப்பவர் த்ரிஷா. "லியோ" படத்திலும் அவருக்கு 17 வயது மகன், "குட் பேட் அக்லி" படத்திலும் 17 வயது மகன். இரண்டு படத்திற்குமே அடுத்தடுத்து கதை கேட்டிருக்க வாய்ப்புண்டு. அப்போது த்ரிஷா என்ன நினைத்திருப்பார் ?.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!