
அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி
இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவரிடத்தில், குட் பேட் அக்லி படம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் . அதோடு கூலி படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. ஜெயிலர்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறிய ரஜினிகாந்த் , மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி. ரொம்ப நல்ல மனிதர். அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!