
அஜித்தின் குட் பேட் அக்லி வெளியானது : ரசிகர்கள் கொண்டாட்டம்... எத்தனை தியேட்டர் தெரியுமா...!
கேங்ஸ்டர் தொடர்பான கதையில் படம் உருவாகி உள்ளது. அஜித்தின் முந்தைய ரவுடித்தனம் கலந்த கேங்ஸ்டர் படங்களான தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல கேரக்டர்களின் சாயல்கள் இந்த படத்தில் உள்ளது சமீபத்தில் வெளியான டிரைலர் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்த திரைப்படம் சுமார் 963 தியேட்டர் வரை தமிழகத்தில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டரை நெருங்கி திரையிட்ட படம் என்ற சாதனையை இந்த குட் பேட் அக்லி பெற்றுள்ளது.
விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக குட் பேட் அக்லி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுக்க இப்படம் காலை 9 மணிக்கு வெளியானது. முதல் காட்சியை கொண்டாட்டமாக வரவேற்ற ரசிகர்கள் ஆட்டம், பாட்டு என கொண்டாடி தீர்த்தனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!