
குழந்தைகளின் உளவியலை பேசும் நாங்கள்
படம் பற்றி அவர் கூறும்போது, ""இது குழந்தைகள் பற்றிய படம். கண்டிப்பான தந்தையின் வளர்ப்பில் இருக்கும் 3 மகன்கள், வாழ்க்கையை எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பது கதை. உளவியல் ரீதியான பிரச்னைகளையும் இந்தப் படம் பேசும். சீரியஸான கதை என்றாலும் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். மிதுன், ரித்திக், நிதின் ஆகியோர் குழந்தைகளாக நடித்துள்ளனர். ரோட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற படத்தை வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியிடுகிறோம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!