
டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை
ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் என்பவர் டாக்குமெண்டரியாக உருவாக்கி வருகிறார். இதற்கு "ரகுவரன்: காலத்தை வென்ற கலைஞன்" என்று டைட்டில் வைத்துள்ளனர். ஏ.எச் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ரகுவரனின் சாயலை கொண்ட அதுல்ஷரே என்பர் ரகுவரனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், ரோகிணி எழுத்தாளர் இந்துமதி, நிழல்கள் ரவி, ரகுவரனின் அம்மா, சகோதரர், மகன் ரிஷி ஆகியோர் ரகுவரன் குறித்து பேசி இருக்கிறார்கள். இந்த படத்தில் 60 சதவிகிதம் ரகுவரன் நேரடியாக தோன்றும் இதுவரை வெளிவராத வீடியோ காட்சிகள் இடம்பெறுகிறது. ரஜினியின் பேட்டிக்காக படக்குழு காத்திருக்கிறது. ரஜினி பேட்டி கிடைத்ததும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!