
பயர் 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு
இந்தநிலையில் அவர் இயக்குனராக மாறி இயக்கிய "பயர் "என்ற படம் கடந்த பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் 50வது நாள் விழாவை .சதீஷ் குமார் கொண்டாடினார். விழாவில் இயக்குனர் ராம் கலந்து கொண்டு படத்தில் பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
சதீஷ்குமார் கூறும்போது "இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் "டிராகன்", "குடும்பஸ்தன்" உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன. "பயர்" வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டி உள்ளது. நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஏற்பார்கள் என்பதற்கு "பயர்" வெற்றியே சாட்சி. தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து, இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!