
பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி
இந்த நிலையில்தான் "உயிருள்ளவரை உஷா" படத்தை தயாரித்து, இயக்கினார். இந்த படத்தில் காதலர்களுக்கு உதவும் நல்ல தாதாவாக "செயின் ஜெயபால்" என்ற கேரக்டரை வலுவாக எழுதியிருந்தார். இந்த கேரக்டரில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றவே ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அதோடு தேவைப்பட்டால் செயின் ஜெயபால் கேரக்டரை இன்னும் பெரிதாக்கி படத்திற்கு "செயின் ஜெயபால்" என்றே டைட்டில் வைப்பதாக கூறினார். ஆனால் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். டி.ராஜேந்தர் எழுதும் அடுக்குமொழி வசனத்தை தன்னால் பேச முடியாது என்று கருதி தவிர்த்தாகவும் கூறுவார்கள்.
அதன்பிறகு அந்த கேரக்டரில் டி.ராஜேந்தரே நடித்தார். முதன்முதலில் டி ராஜேந்தர் முதன்மை கேரக்டரில் நடித்த படம் இது. படமும் பெரிய வெற்றி பெற்றது. ஜெயின் ஜெயபால் கேரக்டரும் பேசப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நடிக்கவும் தொடங்கினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!