பேடி படத்தின் புதிய அப்டேட்
மார் 31, 2025
Advertisement
ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பின் ‛உப்பனா" பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் அடுத்து ஒரு படத்தில் நடிக்கிறார். ராம் சரணின் 16வது படமாக உருவாகும் இதற்கு "பேடி" என பெயரிட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன் ராம் சரண் பிறந்தநாளில் இதற்கான அறிவிப்பு முதல்பார்வை போஸ்டருடன் வந்தது. இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோவை வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!