
வீர தீர சூரன் - கடைசி நேரத்தில் வழக்கு போடுவது சரியா ?
இப்படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெற்ற தடைதான் இதற்குக் காரணம். இப்படத்தில் முதலீடு செய்திருந்த அந்த நிறுவனம் ஓடிடி உரிமையை தன் வசம் வைத்துள்ளது. ஓடிடி விற்பனை நடைபெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால் தங்களால் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை, அதற்கான நஷ்ட ஈட்டைத் தயாரிப்பாளர் தர வேண்டும் என அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து நேற்று இரவு வரை தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. காலையில் தடையை விலக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 10.30 மணி வரை நீதிமன்றத் தடை இருக்கிறது. அதன்பின் 11 மணிக்கு மேல் படம் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தமிழ்ப் படங்கள் பலவற்றிற்கும் இப்படி கடைசி நேரத்தில் சிலர் தடை பெறுவது வாடிக்கையாக இருக்கிறது. அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் நேற்று ஆவேசமாகப் பேசியுள்ளார்கள். பேச்சுவார்த்தைக்கு வராமல் நீதிமன்றம் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!