
மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல்
அவர் கூறுகையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து சில வதந்திகள் பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. இயக்குனர் சுந்தர்.சி ஒரு அனுபவமிக்க புத்திசாலியான இயக்குனர். அதேபோன்று நயன்தாராவும் ஒரு திறமையான தொழில் முறை நடிகை. அந்த வகையில் மூக்குத்தி அம்மன்-2 படப்பிடிப்பு எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அதனால் இந்த வதந்தியை திருஷ்டி எடுத்த மாதிரிதான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். பொழுதுபோக்கான ஒரு மிகச் சிறந்த மெகா ஹிட் படத்திற்காக அனைவரும் காத்திருங்கள் என்று தெரிவித்து இருக்கிறார் குஷ்பு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!