
டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் குடும்பத்தினர் இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை இப்படம் கலகலப்பாக சொல்கிறது. இதில் யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று சில மாதங்களாக இதன் டப்பிங் உள்ளிட்ட மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். இதே தேதியில் சூர்யாவின் "ரெட்ரோ" படம் வெளியாகிறது என அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!