
புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா
அகிம்சையை மையமாக கொண்டு உருவாகியுள்ள "காந்தி தாத்தா செட்டு" என்ற படத்தில் சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. தற்போது இந்த திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகி இருக்கிறது. அமேசான் பிரைம் தளத்தில் "காந்தி தாத்தா செட்டு" படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இந்த திரைப்படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று குவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக சுக்ரிதி தாதாசாஹேப் பால்கே விருதை வென்றுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!