
பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண்
“எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் எனது அரசு வேலைகள், அரசியல் வேலைகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
பவன் கல்யாண் தற்போது "ஹரிஹர வீர மல்லு" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து "ஓஜி" என்ற படத்தில் அவர் இன்னும் நடித்து முடிக்க வேண்டும். "உஸ்தாத் பகத் சிங்" என்ற படத்திற்கு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வேறு சில படங்கள் பேச்சு வார்த்தையுடன் நிற்கிறது.
அரசியல் கட்சி நடத்த பல கோடி பணம் தேவை. அதை சினிமா மூலம் சம்பாதித்து செலவிடும் எண்ணத்தில் பவன் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!