
ஆக்ஷன் ஹீரோவான பிரஜின்
இந்த நிலையில் தரைப்படை என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார். ராம் பிரபா இயக்கியுள்ளார். ஜீவா, விஜய் விஷ்வா ஆகியோரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ராம் பிரபா கூறும்போது "வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து கேங்ஸ்டர் கும்பல் அந்த பணத்தை கைப்பற்ற, அவர்களிடம் இருந்து மற்றொருவர் என்று அந்த பணம் கைமாறிக் கொண்டே போகிறது. பல்வேறு வகையில், பல்வேறு மனிதர்களிடம் பயணிக்கும் அந்த பணம் இறுதியில் என்னவானது, என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஜானரில் சொல்வதே படத்தின் கதை. தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற 28ம் தேதி வெளியிடுகிறோம்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!