
ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா?
அந்த வகையில் கூலி திரைப்படத்தை படம் வெளியாகி 4 வாரம் கழித்து ஒளிபரப்பலாமா அல்லது 8 வாரங்கள் கழித்து ஒளிபரப்பலாமா என்ற யோசனையில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வட மாநிலங்களை பொறுத்தவரை திரையரங்கில் வெளியாகி 8 வாரம் கழித்து தான் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகும். அப்படி வெளியிடப்படும் படங்கள் மட்டுமே வட மாநிலங்களில் உள்ள மல்டிப்ளக்ஸ் அரங்கில் வெளியிடப்படும். அந்த வகையில் கூலி திரைப்படத்தை வெளியிடுவதில் ஒரு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் படக்குழு யோசனையில் உள்ளதாகவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளதால் திரையரங்கில் 8 வாரங்கள் ஓடிய பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. அதேசமயம் பட ரிலீஸை தீபாவளி அல்லது ஆயுத பூஜை அன்று வெளியிடலாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!