
ரித்து வர்மா - வைஷ்ணவ் தேஜ் : அடுத்த நட்சத்திர காதல் ஜோடி
2020ல் வெளிவந்து வெற்றி பெற்ற "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா. விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த பத்து வருடங்களாக தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கும் தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவருக்கும் காதல் என கிசுகிசு பரவி வருகிறது. தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் சகோதரி மகன் தான் வைஷ்ணவ் தேஜ். "உப்பெனா" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்.
ரித்து, வைஷ்ணவ் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்றாலும் அவர்கள் வெளியில் சந்தித்து தங்களது நட்பை வளர்த்துக் கொண்டார்கள் என்கிறார்கள். அந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது என்று தகவல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!