
பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவரகொன்டா மீது வழக்கு பதிவு
மியாபுர் என்ற இடத்தைச் சேர்ந்த பணிந்திர சர்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள், சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்களை இணையதளங்கள் மற்ற தளங்களின் மூலம் விளம்பரப்படுத்துவதால் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபருக்கும், சமூகத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுவதாக தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!