
தனுஷ், சூர்யாவிற்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
இதுஒருபுறம் இருக்க வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவானது என்பதை கதைக்களமாக கொண்டு உருவாகிறதாம். இப்படத்திற்கு "760 சிசி" என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்க பிரேமலு பிரபலம் மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மமிதா பைஜூ ஏற்கனவே வணங்கான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வந்தார். அதன்பின் அதிலிருந்து சூர்யா, மமிதா இருவரும் வெளியேறினர்.
மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகையான மமிதா தமிழிலும் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். தமிழில் ரெபல் படத்தில் நடித்த இவர் இப்போது ஜனநாயகன், இரண்டு வானம் போன்ற படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!