
ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் படம் : மோனிஷா மகிழ்ச்சி
இதுகுறித்த அவர் கூறியிருப்பதாவது : "மாவீரன்" படத்தில் நான் நடித்ததை பார்த்துதான் சுழல் தொடருக்கு என்னை தொடர்பு கொண்டார்கள். "முப்பி" கேரக்டருக்கு சண்டை காட்சிகள் இருக்கிறது. நன்றாக பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும், காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றார்கள். துணிந்து நடித்தேன். எனது கேரக்டர் இப்போது பேசப்படுகிறது.
இதை பார்த்துவிட்டுதான் "கூலி" படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஜனநாயகன் பூஜைக்கு என்னைக் கூப்பிட்டதையே என்னால நம்ப முடியவில்லை. அந்த பூஜையில் வேற ஒரு உலகத்துல இருக்கிற மாதிரிதான் இருந்தேன். விஜய் சார்கிட்ட நான் ஒரு போட்டோ எடுத்துக்கலாமானு கேட்கவும், வாங்கனு சொல்லிக் கூப்பிட்டார். அவர் பக்கத்துல எந்த ரியாக்ஷனுமே இல்லாம தான் நின்னேன். அந்தத் தருணம் கனவைவிடப் பெருசு " என்றார் மோனிஷா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!