இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா
Advertisement
Advertisement
இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா
மார் 18, 2025
அ நிறம் | அளவு
Advertisement
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன், மாவீரன், நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஷங்கரின் மகனான அர்ஜித் தற்போது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதனால் இவரும் ஷங்கரைப் போலவே இயக்குனராகத்தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபு தேவா இயக்குவதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் நடன மாஸ்டராக சினிமாவில் அறிமுகமான பிரபுதேவா, பின்னர் பாடலுக்கு நடனமாடி வந்தார். இந்த நிலையில்தான் தனது முதல் படமான ஜென்டில்மேன் படத்திலேயே பிரபுதேவாவை ஒரு பாடலுக்கு ஆட வைத்த ஷங்கர் தனது அடுத்த படமான காதலன்-ல் பிரபுதேவாவை ஹீரோவாக்கினார். இந்நிலையில்தான் தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித்தை தான் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதேவா.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!