
நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம்
தற்போது இயக்குனராகி "தி டெஸ்ட்" என்ற படத்தை இயக்கி உள்ளார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசை அமைத்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படம் பற்றி சசிகாந்த் அளித்த பேட்டி வருமாறு: திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளரானேன். 12 வருடங்களுக்கு முன்பு எழுதிய "தி டெஸ்ட்" கதையை இப்போதுதான் இயக்க முடிந்தது.
இது கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட படம். இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடப்பது போன்ற காட்சி இடம் பெறுகிறது. சித்தார்த் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 22 நிஜ கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மேட்ச் படமானது.
கதைப்படி மாதவன், நயன்தாரா, சித்தார்த், கேரக்டர்களுக்கு கடினமான காலக்கட்டம் ஏற்படும்போது, எப்படி அதை எதிர்கொண்டு ஜெயிக்கிறார்கள் என்பது கதை. ஒரேநாளில் பல கோடி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!