
கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன்
இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் கே.பி.ஜெகன் கூறும்போது ""என்னுடைய வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நான் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!